யாழ்ப்பாணம் – உரும்பிராய்ப் பகுதியில் பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று முன்தினம் (06-10-2023) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் இருந்தது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment