யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகலில் கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதத்தினாலேயே யாழ் ராணி மாலையில் தாமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
யாழ் ராணி புகையிரத சேவையில் ஏற்பட்டுவரும் தாமதங்கள் குறித்துக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, இன்றையதினம் இதுதொடர்பாக உரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாகாண நிர்வாக இணைப்பாளர் றுஷாங்கன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகலில் கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதத்தினாலேயே யாழ் ராணி மாலையில் பிந்தி வருவதாகவும், எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் யாழ்-கொழும்பு பிற்பகல் புகையிரத சேவை காலை நேரத்துக்கு மாற்றப்படுவதால், அதன்பின் யாழ் ராணி சேவையில் தாமதம் ஏற்படாது என அனுராதபுரம் பிராந்திய புகையிரத சேவைகள் அத்தியட்சகர் விசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment