நிலைத்திருக்கும் அபிவிருத்தி ஒன்றின் மூலமே நாட்டில் விவசாய உற்பத்திகளை ஊக்குவித்து அதனை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை நாடளாவிய ரீதியில் கல்விக்கூடாக முன்னெடுத்துச் செல்லும் எமது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பாரபட்சம் அற்ற செயற்பாடு பாராட்டதக்க விடயம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவிப்பு –
நல்லிணக்கம், அபிவிருத்தி என்பனவே அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்ப்புடன் இருக்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
சில சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கின்ற கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .
முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நிலைப்பேறான பாடசாலைத் தோட்ட கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.
Be First to Comment