தொழில் முனைப்புடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தினுடாக உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெறும் விவசாய கண்காட்சியின் அங்குரார்ப்பணம் நிகழ்வும் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட 67 பாடசாலைகளுக்கு பரிசில் வழங்கி சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற் தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நிகழ்வினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர் .
மேற்படி கண்காட்சியில் கிராமிய வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் தீலிபன் வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல்ல மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .
Be First to Comment