Press "Enter" to skip to content

வடபகுதியில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழிலேயே இசைக்க வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் –

வடபகுதியில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளில் #தேசிய #கீதம் #தமிழிலேயே இசைக்க வேண்டும் அமைச்சர் #டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் –

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் இனவாதம் பேசலாம் இனவாதிகளாக இருக்கலாம் அவைகள் அரசாங்கத்தில் கொள்கையோ அல்லது அமைச்சரவையின் கொள்கையாகவே இருக்க முடியாது என்பதை தெரிவிக்கும் அதவேளை இன்றைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்காதது என்னுள் பாரிய நெருடலையே ஏற்படுத்தியதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் கலாச்சாரம் தமிழர் பண்பாடு என்று கூறும் நாம் அதனை சரியாக பயன்படுத்தாது இருப்பது மனவேதனை தரும் விடயமாக இருப்பதாக தனது ஆதங்கத்தை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வடபகுதியில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழிலேயே இசைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கூறியிருந்தார் .

தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுணர்களுக்கு சாவகச்சேரி பொதுநோக்கு மண்டபத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *