வவுனியா வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, நேற்று(09.10.2023) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஆறு பேர் படுகாயம்
மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி வாகனம் சென்றுள்ள போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment