Press "Enter" to skip to content

வவுனியாவில் மோட்டார் சைக்கிள், மாட்டுடன் மோதி விபத்து: பெண் ஒருவர் பலி!

வவுனியா, பம்பைமடுவில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கருகில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா, குருக்கள் புதுக்குளத்தில் இருந்து வவுனியா நகர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 22 வயதான மகன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *