Press "Enter" to skip to content

ஹமாஸ் குழுவின் கொடூர தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர்

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மகனை காப்பாற்றி தாய் தந்தை உயிரிழந்த சோகம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , எல்லையையொட்டிய பகுதியில், துப்பாக்கி சூடும் நடத்தியது.

ஹமாஸ் குழுவின் கொடூர தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர் | Parents Lives Save Son Brutal Attack By Hamas

 கதவுகளை உடைத்து  சரமாரி துப்பாக்கிச்சூடு

 

இந்நிலையில் அவர்களின் இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தம்பதி ஒன்று குடும்பத்துடன் அறைக்குள் பதுங்கி இருந்தது. ஷ்லோமி மத்தியாஸ் மற்றும் அவருடைய மனைவி டெபோரோ ஆகியோருடன், ரோத்தம் மத்தியாஸ் என்ற அவர்களின் 16 வயது மகனும் இருந்துள்ளான்.

பயங்கரவாதிகள் தாக்குதலின்போது, அவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கும் வந்து கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

ஹமாஸ் குழுவின் கொடூர தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர் | Parents Lives Save Son Brutal Attack By Hamas

 

இந்நிலையில் , மகனை காப்பாற்றுவதற்காக பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போன்று படுத்து கொண்டதில், படுகாயமடைந்த அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டனர்.

ஹமாஸ் குழுவின் கொடூர தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர் | Parents Lives Save Son Brutal Attack By Hamas

தாக்குதலின்போது, அவர்களின் மகனுக்கு வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மத்தியாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *