ஆசிரியரை தொட்டு வணங்கும் போது முகத்தில் முத்தமிடுவதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரை தொட்டு வணங்கும் போது முகத்தில் முத்தமிடுவதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகவும் அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் போது தன்னை பார்ப்பதற்காக இந்த ஆசிரியர் வீட்டுக்கு வந்ததாகவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர் நோய்க்கு மருத்துவம் பார்க்கச் செல்லுமாறு கூறி தன்னை கட்டி அணைத்துக்கொண்டதாகவும் அது மிகவும் அசௌகரியமாக இருந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Published in Uncategorized
Be First to Comment