Press "Enter" to skip to content

விடத்தல்தீவு கடல் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு-

மன்னார் விடத்தல்தீவு கடல் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு-

மன்னார் விடத்தல்தீவு கடல் தொழிலாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக விடத்தல்தீவுக்கு இன்று மாலை விஐயம் செய்த கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டார் .

குறிப்பாக தமது பகுதியில் உள்ள படகு கட்டுமான துறையை தூர்வாரி ஆழமாக்கி தரவேண்டும் எனவும் சட்டவிரோதமாக வருகைதரும் உள்ளுர் இழுவை படகுகளின் அத்துமீறிய செயற்பாடால் தமது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்தித்தி தரவேண்டும் எனவும் தமது பகுதியில் உள்ள வாவியில் தடுப்பணைகள் சீராக இல்லாததினால் மழை காலங்களில் வெள்ள நீர் உட்புகும் நிலைமை ஏற்படுவதாகவும் அதற்கு தடுப்பணைகள் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மற்றும் கடலட்டை பண்ணைகள் வழங்கும் விடயத்தில் ஏற்படும் தாமதங்களால் பலர் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இவை தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், சட்ட ஏற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகளும் இவ்வாறான சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்வதற்கு ஏதுவாக இருப்பதானால், இந்த வருட இறுதிக்குள் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானியை வெளியிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் கடலட்டை பண்ணைகள் வழங்குவதில் உள்ள தடைகளை ஆராய்ந்து சரியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதுடன், ஏனைய விடயங்களை காலக்கிரமத்தில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகள் காணப்படும் எனவும் தெரிவித்தார் .

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *