கண் நோய் பரவி வருவதால் யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய் ஏற்பட்டதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அந்த வகுப்பறையில் இருந்த 13 மாணவர்களுக்கு கண் நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், மற்ற மாணவர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கவும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் சிறார்களுக்கு கண் நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நோய் அறிகுறிகளுடன் கூடிய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது
Be First to Comment