கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இருசக்கர உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Be First to Comment