Press "Enter" to skip to content

யாழில் தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ் பருத்தித்துறை பகுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இத் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்கோவளம் பருத்தித்துறையைச் சேர்ந்த குமரன் கர்னிகா (வயது- 29) என்ற மூன்று பிள்ளைகளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அப் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இரவு தனக்குத்தானே தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழில் தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண் | Oung Family Woman Set Herself On Fire In Jaffna

வைத்திய சாலையில் அனுமதி

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (14) சனிக்கிழமை அதிகாலை உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணம் தொடர்பில் யாழ். போதன வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *