யாழ்ப்பாண மாவட்டத்தில்உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவுஅறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது .
குறிப்பாக திருநெல்வேலி, மருதனார் மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் இந்த விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம் பெற்று வருகின்றது குறித்த சந்தைகளில் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு அவர்களிடம் இந்த கழிவு அறவிடப்படுகின்றது எனவே விவசாயிகள் இது தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள் எனவே பொதுவான தீர்மானமாக பொதுவான முறைப்பாடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள் இந்த விடயம்தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம்கோரிக்கைவிடுத்ததை யடுத்து குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் இதனை தடுத்த நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த கூட்டத்தின் தீர்மானமாக 10வீத கழிவு அறவிடும் நடை முறையினை நிறுத்த கோரிய முறைப்பாட்டினை முன் வைக்கின்றோம். எனவே உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அத்தோடு குறித்த சம்பவத்தினை பொலிசாரால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது இதற்கு பிரதேச செயலர்கள் கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கழிவு நடைமுறை தொடர்பிலான சகல தகவல்களையும் பொலிசாருக்கு வழங்கினால் பொலிசாரினால் அதனை கட்டுப்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்,
மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகள் சந்தைகளை குத்தகைக்கு கொடுக்கும்போது இந்த கழிவு நடைமுறை அமுல்படுத்த கூடாது என்ற நிபந்தனையும் பின்பற்றிய வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது,
Be First to Comment