Press "Enter" to skip to content

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் பல முக்கிய பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிய தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் கடந்த காலங்களில் இராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வேறு வேலைகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பதவி விலகியவர்கள் நீண்ட காலமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *