அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை மறுதினம் பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இந்தியா தமிழ்நாடு இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப் படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்தது.
அதே போல தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப் படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கடற்படை கைது செய்தது.
இந்த நிலையில் ஐந்து விசை படகையும், 27 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை இந்திய மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 18ஆம் திகதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் மீனவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வீதி மறியல் போராட்டம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment