இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வாறு உயிரிழந்த அனுலா ஜயதிலக என்ற பெண்ணின் சடலம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment