லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாம் வினவியபோது, சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் Mansourieh என்ற பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது மேலும் 5 பேர் அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Be First to Comment