அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம, முல்லேகம பகுதியைச் சேர்ந்த தினிதி திமாரா என்ற பதினான்கு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தோழி ஒருவருடன் மாடியில் படித்துக் கொண்டிருந்த போது, ’அம்மா கை கொஞ்சம் வலிக்குது’ என்று தாயிடம் கூறியுள்ளார்.
பின்னர், திடீரென வாந்தி எடுத்து தரையில் விழுந்த அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒருவெல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர் பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஒவ்வாமையால் மாணவி உயிரிழப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
- ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம்
- அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
- இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
- சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்!
Be First to Comment