Press "Enter" to skip to content

நீதிபதி சரவணராஜாவுக்கு அச்சுறுத்தலும் இல்லை, அவரின் இராஜினாமா கடிதத்தை நாம் ஏற்கவுமில்லை!! நீதி அமைச்சர்…

தொடர்பும் இருக்கவில்லை. எனவே, சட்ட மா அதிபரினால் எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

இறுதியாக ரி.சரவணராஜா 2023.09.25 ஆம் திகதியிலிருந்து 07 நாட்களுக்கு நோயாளர் ஒருவரை பார்ப்பதற்காக இந்தியா, தமிழ்நாட்டுக்குச் செல்வதற்கு வெளிநாட்டு விடுமுறை கேட்டுள்ளார். ஆகவே, செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் முதலாம் திகதி வரை விடுமுறையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை. ஆனால், எமது நீதித்துறை மீதுள்ள

நம்பிக்கையை இல்லாமலாக்கும் வகையிலும் பாரிய பிரச்சி னையாக்க முயற்சித்தமை கவலைக்குரியதாகும். அதுமாத்திரமல்லாமல் இவருக்கு எதிராகவும் அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாரதூரமான குற்றச்சாட்டை அவரின் மனைவியே நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் முன்வைத்திருக்கிறார்.

அதற்கு ஆணைக்குழுவினால் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் அவரின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள விரும்பவுமில்லை. அவரின் இராஜிநாமாக் கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழு இதுவரையில் பொறுப்பேற்கவுமில்லை. இவ்விவகாரத்தில் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை எடுக்கும்.

அதில் நாங்கள் தலையிடப்போவதுமில்லை. அதற்கான அதிகாரமும் எங்களுக்கு இல்லை என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *