வெலிக்கந்தை – குடாபொக்குன வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மனித எச்சங்களுடன் பெண்ணின் ஆடைகளும் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கந்தை பிரதேச பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மனித எச்சங்கள், பெண்ணின் ஆடை, தலைக்கவசம் மற்றும் உணவு பொதியின் துண்டுகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீட்கப்பட்ட எச்சங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வெலிகந்தை பிரதேசத்தில் காணாமல்போன பெண்ணுடையதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment