இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும், இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளன.
இந்த உடன்பாடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 330 மில்லியன் டொலரை, இரண்டாவது தவணையின் அடிப்படையில், இலங்கை பெற்றுக்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அனுமதியானது, இலங்கை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னைய நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதையும், கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றத்தையும் சார்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment