சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சீரற்ற காலநிலையால், பெரும்போகத்தில் சுமார் 58 ஆயிரத்து 770 ஏக்கர் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 53 ஆயிரத்து 956 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு விவசாய அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment