சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் புதிய கடன் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளத அரசாங்கம் கூறியுள்ளது.
இந்தக் கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்கு உரிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனையில் அமைவாக இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
165 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 165 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக அரசாங்கம் “சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் திட்டத்தை” நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும், பணப்புழக்க அடிப்படையிலான கடன்களை விட, பிணைய அடிப்படையிலான கடன்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிப்பதால், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வாக, தேசிய கடன் பாதுகாப்பு முகமை நிறுவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தங்கள் தொழில்களுக்கு நிதி திரட்டுவதில் சிரமம் உள்ள தொழில்முனைவோருக்காக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
Be First to Comment