Press "Enter" to skip to content

அதிகாரிகள் மீது சீறி பாய்ந்தார் வடக்கு ஆளுநர்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாயத் திணைக் களத்தினால் இந்த வருடத்திற்கான முன்மொழிவு ஒன்று இன்றைய தினம்ஒழுங்கிணைப்பு குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட போது குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் கேள்வி எழுப்பப்பட்டது?

அதாவது அரசாங்க நிதியில் செயற்படுத்தப்படும் செயற்திட்டத்தினை வருட இறுதியில் அதனை நடைமுறைப்படுத்த அனுமதி கோரினால் எவ்வாறு அந்த திட்டத்தினை செயற்படுத்த முடியும்? அவ்வாறு செயற்படுத்த முடியாது இது ஒரு நையாண்டியான விடயம் என கடுமையான தொனியில் அதிகாரிகளை எச்சரித்தார்.

குறிப்பாக மக்களுக்கான திட்டங்களிலே இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏன் தெரியப்படுத்துவதென்றால் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்று அதற்குரிய ஒப்புதலை வழங்குவதற்காகவே எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறு செயற்பட வேண்டாம் என ஆளுநர் அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்தார்,

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *