Press "Enter" to skip to content

ஒரு மாதத்திற்குள் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு மாதத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“01.09.2023 முதல் 30.09.2023 வரை, ஒரு மாதத்திற்குள், 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

“அவர்களில் 22 சிறுமிகள் ஏற்கனவே கர்ப்பமாகிவிட்டனர். நாங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இருக்கிறோம்.”

அவர்களில் பெரும்பாலானோர் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களாலேயே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதேநேரம் கர்ப்பமடைந்துள்ள சிறுமிகளில் 15 பேர் காதல் விவகாரத்தால் இந்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

எஞ்சிய 7 சிறுமிகள் பலத்காரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே இதற்கு மேலும் இவற்றை அனுமதிக்க முடியாது. சட்டத்தை கடுமையாக்கி இவற்றை தடுக்க வேண்டும” என்றார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *