உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் குறிப்பாக மதுபான சாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கயன் இராமநாதன் அவர்கள் உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபான சாலை ஒன்று இயங்கி வருகின்றது அதாவது மதுபான சாலைக்கு செல்வோர் பெல் அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும் எனவே அதனை கட்டுப்படுத்துமாறு கோரிய போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பாதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Be First to Comment