சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு நாரா அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் ஆராய்ச்சிக்குழுவை அனுப்பவுள்ளதாக நாராவின் பணிப்பாளர் நாயகம் கமால் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட பிராந்தியத்தின் காலநிலையில் கடல் அமைப்பின் தாக்கம் குறித்து ஆராய்ச்சிகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கடும் கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் சி யான் -6 கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது
Be First to Comment