Press "Enter" to skip to content

மாவை சேனாதிராஜா அவர்களுக்கு 81 வயது

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் இன்றுடன் தனது 82 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்,

முதுமை நிலையினை அடைந்தாலும் நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்ட மாவை சேனாதிராஜா தந்தை செல்வா காலத்தில் இருந்து தமிழினத்தின் விடிவிற்காக நடாத்தப்பட்ட பல்வேறு அகிம்சை வழி போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்து சிறை வாசம் அனுபவித்ததோடு கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்பாராளுமன்றத்திலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்பதோடு வலி வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணிகளை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் பிரசுரித்தமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து காணி விடுவிப்புக்கு முன்னின்று உழைத்தவரும்இவரே,,எனினும்

கடந்த வாரம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முதுமை நிலையினை அடைந்துள்ளதன் காரணமாக தனது எம் பி பதவியினை துறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *