Press "Enter" to skip to content

முறுகண்டி பிள்ளையார் ஆலயத்தில் புனநிர்மாணப் பணிகள் பற்றிய அமைச்சரின் கருத்து

வரலாற்றுச் சிறப்புமிக்க முறுகண்டி பிள்ளையார் ஆலயத்தில் புனநிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போது, ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்ற ஆலயத்தின் புனர்நிர்மாணம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், ஆலய சூழலை அழகுபடுத்தி மேம்படுத்தும் என்ற நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய நிர்வாகத்தினர் , வர்த்தக சங்கத்தினர், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடனும் கலந்துரையாடினார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், தரை வழியாக யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை முதலாவதாக மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முறுகண்டி ஆலயத்தின் பூசை வழிபாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், ஆலய சூழலில் வியாபார செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், ஆலயத்தின் புனர்நிர்மாணம் தொடர்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி, மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *