Press "Enter" to skip to content

19 கொலை சம்பவங்கள்: அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த சந்தேக நபர்!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தங்கல்லே சுதா” என அழைக்கப்படும் நிலந்த குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் 19 கொலை சம்பவங்கள்: அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த சந்தேக நபர்! | 19 Murders Suspect Gave A Shocking Confession

 

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலந்த குமார எனப்படும் தங்கல்லே சுதாவை 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.

சந்தேகநபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், தான் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் மூலம் 19 கொலைகளைச் செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இலங்கையில் 19 கொலை சம்பவங்கள்: அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த சந்தேக நபர்! | 19 Murders Suspect Gave A Shocking Confession

 

இதேவேளை, மாகந்துரே மதுஷ் உட்பட பல பிரபல குற்றவாளிகளின் கூலிப்படையாக செயற்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர் கூறிய கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *