உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீதே, சந்தேகநபர் இவ்வாறு நடந்துகொண்டார்.
மரணமடைந்த யாசகர், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் ‘நீ குளிக்கமாட்டீர் இல்லையா? குளிக்காவிட்டால் தீ வைப்பேன்’ என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார்.
அதேபோன்று நேற்று இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள், யாசகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் இன்று காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
உறங்கிக்கொண்டிருந்த யாசகர் பெற்றோல் ஊற்றி கொலை: சந்தேகநபர் கைது!
More from UncategorizedMore posts in Uncategorized »
- அரச சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த அதிரடி தீர்மானம்
- வேட்புமனுவில் கையொப்பமிட வந்த தமிதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய எமில்காந்தன்..!
- ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து..!
- மசாஜ் நிலையம் சென்ற சிறுமி பெண்களால் துஷ்பிரயோகம்
Be First to Comment