இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அனஜெடி தலைமையிலான குழுவினர் இன்று (30.10.2023) திங்கட்கிழமை கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
வட மாகாணத்தில் உலக வங்கியின் சுமார் 1400 மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரதேச வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப கூடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
அவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பார்வையிடும் முகமாக குறித்த குழுவினர் வருகை தந்தனர்.
உயர் மட்ட கலந்துரையாடல்
இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு கோப்பாய் வைத்தியசாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் உயர் மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண பதில் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன்.
மற்றும், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு அதிகாரி வைத்தியர் மகேந்திரன் , கோப்பாய் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் சிவா கோனேசன் ,ஜப்பான் ஜெயிக்கா நிறுவன அதிகாரிகள், உலக வங்கியின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Be First to Comment