Press "Enter" to skip to content

சிறுவர் இல்லமொன்றில் இருந்து 05 சிறுமிகள் தப்பியோட்டம்!

சிறுவர் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து சிறுமிகளும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாகவும் மெட்டியகொட பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தப்பியோடிய 17, 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் படபொல, கொழும்பு, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய சிறுமிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *