வவுனியா – மன்னார் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள பாதைசாரி கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்ற மின்சார சபை ஊழியர் மீது, பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதான நௌபர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த ஊழியர் முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரிந்ததுடன் வவுனியா, குருமன்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தில் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
நடந்து சென்ற மின்சார சபை ஊழியர் மீது ஹயஸ் மோதியதில் பலி!
More from UncategorizedMore posts in Uncategorized »
- அரச சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த அதிரடி தீர்மானம்
- வேட்புமனுவில் கையொப்பமிட வந்த தமிதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய எமில்காந்தன்..!
- ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து..!
- மசாஜ் நிலையம் சென்ற சிறுமி பெண்களால் துஷ்பிரயோகம்
Be First to Comment