ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ கிராமத்தில் கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிலாகே லசந்த சந்தமாலி என்ற 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியதில் அவர்களது 2 வயது குழந்தையும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொலையுண்ட பெண்ணின் தந்தையும் குறித்த நபரால் மண்வெட்டியால் தாக்கப்பட்டதுடன், அவரும் ஆபத்தான நிலையில் மெதிரிகிரிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது ஹிங்குராக்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பணத் தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த நபர் பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மரணம் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Be First to Comment