கிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தர்மபுரம், கிளிநொச்சியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான 20 வயதான இந்துஜன் பானுசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 25ம் திகதி இரவு வயிற்று குற்று ஏற்பட்டதை அடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (29-10-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து பிரதேச பரிசோதனைக்கு பின்னர் சடலவம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
Be First to Comment