Press "Enter" to skip to content

அனுராதபுரத்தில் சிறுமி ஒருவர் கடத்தல்

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி நேற்று அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *