Press "Enter" to skip to content

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட மைத்திரியின் ஊடகச் செயலாளர்

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகச் செயலாளராக பணியாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொட்டாஞ்சேனை பொலிஸார், சாட்சியங்கள் பாதிக்கப்படலாம் என்பதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதி மோசடி

பொலன்னறுவையைச் சேர்ந்த ரசிக பண்டார என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட மைத்திரியின் ஊடகச் செயலாளர் | Canada Work Visa Maithiri Media Person

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்டத் தலைவர் வசந்த ஜயவர்தனவின் தனிப்பட்ட செயலாளர் மொஹமட் ஷபீக் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டை படித்து காண்பித்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *