நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.
இதற்கமைய 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (02) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3 ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7 ஆம் திகதியும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 8 ஆம் திகதியும், தென் மாகாணம் மற்றும் வட மத்திய மாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 9 ஆம் திகதியும் குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி மேல் மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Be First to Comment