Press "Enter" to skip to content

மனைவியின் கடவுச்சீட்டை வைத்து யாழ் யுவதியை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் இன்றைய தினம் பிற்பகல் (31-10-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் கடவுச்சீட்டை வைத்து யாழ் யுவதியை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்! | Tamils Try Jaffna Girl Abroad Using Wife Passport

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர், தனது 5 வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன் இத்தாலி செல்வதற்காக இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 1.45 மணிக்கு G.9509 இலக்க Air Arabia விமானத்தில் பயணிக்கவிருந்தனர்.

மனைவியின் கடவுச்சீட்டை வைத்து யாழ் யுவதியை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்! | Tamils Try Jaffna Girl Abroad Using Wife Passport

அவர்கள் குடியகல்வு சாளரத்தில் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகங்கள் எழத் தொடங்கின. ​​​​அவர்கள் மூவரும் எல்லை ஆய்வு பிரிவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​இந்த சிறு குழந்தை, சந்தேக நபருடையது எனினும், இந்த பெண் அவர்களது குடும்பத்தின் மனைவியோ அல்லது தாயோ அல்ல என்றும், வேறு பெண் என்றும் தெரியவந்தது.

மனைவியின் கடவுச்சீட்டை வைத்து யாழ் யுவதியை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்! | Tamils Try Jaffna Girl Abroad Using Wife Passport

 

சந்தேக நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச்சீட்டை கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த கடவுச்சீட்டை வைத்து வேறொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற அவர், இதற்கு முன்னர் மனைவியின் கடவுச்சீட்டை பயன்படுத்தி மேலும் ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் 3 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *