கடந்த மாம் 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி, அன்றைய தினம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் நிற்பது, சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவரது தாயார் கூறுகையில்,
“கடந்த 17ம் திகதி இரவு 9.28 மணிக்கு போன் வந்தது.. என் மகள்தான் போன் பண்ணியிருந்தார். ப்ளீஸ் அம்மா என்னைத் தேடாதீங்க.. எனக்கு வர முடியாது.. பொலிசுக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாள். அதே சமயம், அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் பொலிசுக்கு போக வேண்டாம் என்று கூறினார்.
Be First to Comment