Press "Enter" to skip to content

44 வயதில் செய்த மோசமான செயலுக்கு 55 வயதில் தண்டனை

சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, தற்போது 55 வயதாகும் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார் எம்பிலிப்பிட்டிய செவனகல மஹகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

44 வயதில் செய்த மோசமான செயலுக்கு 66 வயதில் தண்டனை! | Srilanka Child Abuse Case

12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

சந்தேக நபருக்கு சிறைத்தண்டனையுடன் சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டை வழங்குமாறும் 25,000 ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.

குறித்த நபர் 2011 ஆண்டு சிறுமி மீது பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளை இந்த வழக்கின் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *