நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த ஹட்டன் லங்கம டிப்போ ஊழியரின் சடலம் இன்று (03) மதகு ஒன்றின் கீழ் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்தில் குறித்த நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹட்டன் லங்கம டிப்போவில் ஊழியராக பணியாற்றிவர் எனவும் உயிரிழந்தவர் நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் மனைவி ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்து தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Be First to Comment