முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் விசேட பதவியொன்றை கோரியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அதற்கு ஆதரவளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் அதன் மூலம் அவர் அரசியலில் மீண்டும் ஈடுபட தீர்மானித்துள்ளார் என கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அனுர பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றம் ஏற்பாடு செய்திருந்த வறிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளிற்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்கள் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் விசேட பதவியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளன இது முற்றிலும் தவறான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரே என்னிடம் வந்து எனது ஆதரவிற்கு மன்றாடினார் எனினும் நான் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் பல கட்சிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சரதி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியே தற்போது கட்சியின் ஸ்தாபகர் எனவும் தெரிவித்துள்ள அவர் கட்சியின் யாப்பை மாற்றி புதிய பதவிகளை அறிமுகப்படுத்தும் அளவிற்கு பேச்சுவார்த்தைகள் இல்லை ஆனால் அவர் எங்களிற்கு மிகப்பெரிய பலம் ஆகவே அவரின் ஆதரவை நாங்கள் பெறவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment