விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரிக்க முயற்சித்ததாகவும், அது இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.






Be First to Comment