பொலிஸ் விசாரணை கொழும்பு, கிரகரி வீதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை, பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த இரண்டு பெண்களும், மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Be First to Comment