இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்,இதன் மூலம் 10,000 இலங்கையர்களை பண்ணை தொழிலாளர்களாக உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இஸ்ரேலிய செய்தி நிறுவனமான குளோப்ஸ் கடந்த வார அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு கையெழுத்திட்டது, இது இஸ்ரேலிய நிறுவனங்கள் விவசாயத் துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர அனுமதிக்கும்.இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7 முதல், விவசாயத் துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளனர்.அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலின் போது, அதிகளவான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், பலர் காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.அதே நேரத்தில் சுமார் 20,000 பாலஸ்தீனிய விவசாய தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்திற்கு அமைய முதல் இலங்கை விவசாயத் தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் வரவேண்டும் என குளோப்ஸ் தெரிவித்துள்ளது.ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த 4,500 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பராமரிப்புத் துறையில் பணிபுரிகின்றனர்.
Be First to Comment