நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முப்படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.ஹப்புத்தளை – கொழும்பு வீதியில் பெரகலை, பத்தலேகொட பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்ட இருந்த மண் சரிவை அகற்றுவதற்காக இலங்கை இராணுவம் அணிதிரட்டப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பிரிவின் படி, இராணுவ ரைடர்கள் குழு அதிகாலையில் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் மக்களை எச்சரித்துள்ளது.மலையகத்தை தலைநகருடன் இணைக்கும் இந்த முக்கியமான வீதியூடாக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணியாளர்களுடன் படையினரால் பின்னர் வீதி துப்புரவு செய்யப்பட்டது.அதே நாளில் அதே பகுதியில் உள்ள பொரலந்தாவில் சிறிய மண் சரிவு ஏற்பட்டு வாகனப் போக்குவரத்து தடைப்பட்டதை அடுத்து, மற்றுமொரு வீதியையும் இராணுவ வீரர்கள் சுத்தம் செய்துள்ளனர் .இதற்கிடையில், புத்தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையினர் நாகவில்லுவ, புத்தி காமினிபுர கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,200 சமைத்த உணவுப் பொதிகளை வழங்கியுள்ளனர்.முன்னதாக ஒரு சம்பவத்தில், இலங்கை கடற்படையின் விரைவு நடவடிக்கை படகுப் படையின் (RABS) குழுவொன்று, காலி ஜின் ஆற்றின் மீது தொடம்கொட மற்றும் வக்வெல்ல பாலங்களின் கீழ் வெள்ளக் குப்பைகள் அடைப்புகளை ஏற்படுத்தியதையடுத்து, நீர் சீராக செல்வதற்கு இடையூறாக இருந்ததைத் தொடர்ந்து தடைகளை நீக்கியது. .நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன கடற்படையினருக்கு உதவியதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment