நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவர் மே்லும் தெரிவித்தார்.
அதேபோல், செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 பேர் கர்ப்பம் தரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment